சக்தி வாய்ந்த சனிப்பிரதோஷத்தில் உங்கள் ராசிபலன் எப்படி..!{24-5.2025}

 

சனிக்கிழமை, 24 மே 2025
மேஷம்
aries-mesham
வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். செலவுகளைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்களை மட்டும் வாங்கவும்.
ரிஷபம்
taurus-rishibum
தனவரவு அதிகரிக்கும். பெண்கள் மூலம் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும் அனுகூலமான நாள். டாக்டர்கள் கைவிட்ட கேஸ் கூட உடல் நலம் பெற்று படுக்கையை விட்டு துள்ளி எழுவர்.
மிதுனம்
gemini-mithunum
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் இனிய திருப்பங்கள் ஏற்படும். அரசு உதவிகள், புதிய வேலைவாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி என அனுகூலமான பலன்களை எதிர்பார்க்கலாம்.
கன்னி
virgo-kanni
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். இனிமையான, மற்றும் சாதுர்யமான பேச்சாற்றலால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
செல்வ நிலை சீராக உயரும். அரசால் ஆதாயங்கள் ஏற்படும். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். பலவகைகளில் மனைவி உதவி செய்வாள்.
கடகம்
cancer-kadagam
தீவிர தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். திருவருளாலும், குருவருளாலும் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். புனித பயணங்கள் மேற்கொள்வீர்கள்.
சிம்மம்
leo-simmam
எவரையும் ஏமாற்ற நினைக்காதீர்கள். மனைவியின் கலகத்தால், உறவுக்குள் குழப்பம் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியிடத்தில் சாதகமான சூழல் உருவாகும்.
துலாம்
libra-thulam
வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு வாங்கும் எண்ணம் எழும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள் நிறைவேறும்.
மீனம்
pisces-meenam
தனவரவு ஏற்பட்டு மகிழும் நாள். புதிய பதவிகள், வாகனம், வசதி வாய்ப்புகள் என எல்லா விதத்திலும் முன்னேற்றம் ஏற்படும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும்.
தனுசு
sagittarius-thanusu
அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். அதிக முயற்சி எடுத்து முன்னேற முயலுங்கள். வெற்றி உங்கள் பக்கம். நீர்நிலைகளில் கவனமுடன் இருங்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தங்கள் பொருட்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டிய நாள். பயணங்களின் போதும் எச்சரிக்கை தேவை. வியாபாரிகளுக்கு தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடையாது.
கும்பம்
aquarius-kumbam
கவனமாகப் படித்தால் கல்வியில் தேர்ச்சி பெறலாம். வாக்குவாதங்களை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்புத் தேவை.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post