ஞாயிற்றுக்கிழமை, 25 மே 2025
மேஷம்
aries-mesham
குழந்தைகளுடன் குழந்தையாய் கொண்டாடி மகிழ்வீர்கள். பணவரவு கூடும். மனைவியால் குடும்ப சுகம் கூடும். வாகன யோகம், பெரியோர் நேசம் ஆகியவற்றால் மனத்திருப்தி ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை, பெற்றோரால் இலாபம் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. பெண்களால் செலவுகள் அதிகரிக்கும். ஏமாற்றங்களும் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
கல்வி நிலை சிறக்கும். எந்த விஷயத்திலும் மனம் முழுமையாக ஈடுபடும். எப்போதும் விழிப்புடன் செயல்படுவீர்கள். பொது வாழ்க்கை மற்றும் பயண ஆர்வம் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
தொழில் புரிவோருக்கு வீண் செலவுகள் மற்றும் பணமுடையும் ஏற்படலாம். உண்ணவும் நேரமின்றி உழைப்பு அதிகமாகும். சினத்தைக் குறைத்தால் சிக்கல்கள் தீரும்.
மகரம்
capricorn-magaram
சுக, சௌக்கியங்கள் குறையும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக இருக்காது. தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூக்கம் குறையும். காரியத் தடைகள் ஏற்படும்.
கடகம்
cancer-kadagam
பணவரவால் மனம் பரவசப்படும். இந்திர போகம் உண்டாகும். முன்னேற்ற வாய்ப்புகள் கதவைத் தட்டும். பிறருக்குக் கட்டளை இடுகின்ற உயர் பதவிகள் கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
பாக்கிய விருத்தி ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் தனவரவு கூடும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தெய்வ பக்தி அதிகரிக்கும். உல்லாசப் பயணங்கள் உவகை தரும். புகழ் ஓங்கும்.
துலாம்
libra-thulam
வாகன மற்றும் போஜன சுகங்கள் கூடும், எதிலும் ஒரு மனத் திருப்தி நிலவும். சேவை மூலம் ஆதாயம் பெருகும். நம்பிக்கை மிக்க நண்பர்களின் உதவி கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
தொழில், வியாபாரம் சம்பந்தமாக வாங்கிய கடன்களை கேட்டு கெடுபிடி செய்வார். தாயிடம் தர்க்கத்தை தவிர்த்து இனிமையாக பேசுவது சிறப்பு.. பணி மாற்றம் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைப்பது அரிது. பயணத் தடைகள், விபத்து நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எச்சரிக்கை அவசியம். செல்வ நிலைகளில் சரிவு ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பொதுவாழ்க்கை, தொழில் அல்லது வியாபாரத்தில் பிரமிக்கத்தக்க மாற்றங்கள் நிகழலாம். புகழ் ஓங்கும். பெரியோரைப் போற்று வார்கள். சொத்துக்கள் சேரும்.
கும்பம்
aquarius-kumbam
தன லாபம் அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் உருவாகும். மனைவியின் பூரண ஒத்துழைப்புக் கிடைக்கும். புதிய உற்சாகம் பிறக்கும். மனதில் தைரியம் நிலவும்.