மன்னாரில் 3 பிள்ளைகளின் தந்தை துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக..?

 மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் நேற்று கண்டுபிடக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரிதன்னைத்தானே சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவமானது அச்சங்குளம் கடற்கரை ஓரத்தில் அமைக்கப்பட்ட கடற்படையின் கண்காணிப்பு காவலரணில் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

மன்னாரில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரியின் சடலம் மீட்பு | Navy Soldier S Body Recovered

சம்பவ இடத்திற்கு முதல் கட்ட விசாரணைகளுக்காக முருங்கன் பொலிஸார், தடயவியல் நிபுணர்கள், சென்று பார்வையிட்டனர்.

பின்னர் மன்னார் மாவட்ட நீதிபதி வருகை தந்து சடலத்தை பார்வையிட்டு விசாரணைகளின் பின்னர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

உயிரிழந்த கடற்படை அதிகாரி37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

 இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post