மட்டு நகரில் 3 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு..!

 

மட்டக்களப்பு - ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண்ணொருவர் காயமடைந்த நிலையில், இன்று (26) சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான ரவி என அழைக்கப்படும் அண்ணாமலை ரவீந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற இவர் சம்பவதினமான இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசல் கதவில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். 

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் வீட்டின் வெளி கதவை உடைத்து உள்நுழைந்து தடயவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்ததுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post