3 பிள்ளைகளின் தந்தை சடலமாக-புரியாத காரணம்..!

 

பொகவந்தலாவ டியன்சின் தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் நேற்று (29) வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

குறித்த நபர் தனது வீட்டில் நேற்று இரவு உறங்கி கொண்டிருந்த நிலையில் உயிர்ழந்து காணப்பட்டதாகவும் உயிர்ழந்த நபரின் மூக்கு பகுதியில் இரத்தகரை காணப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் விசாரனைகளை ஆரம்பித்த பொகவந்தலாவ பொலிஸார் குறித்த மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்து ஹட்டன் தடைவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவலைக்கப்பட்டு விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டார என பொலிஸார் பல கோணங்களில் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டியன்சின் தோட்டப்பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ஜெயராஜ் என்பவரே உயிரழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இதேவேளை, மரண விசாரனைகள் ஹட்டன் நீதிமன்ற பதில் நீதவான் எஸ். ராமமூர்த்தி தலைமையில் மரண விசாரனைகள் இடம்பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post