விபத்தில் பற்றி எரிந்த வாகனம்-7 பேர் உடல் கருகி பலி..!

 

அமெரிக்காவில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவிற்கு செல்லும் நெடுஞ்சாலையில்  லொறியொன்றுடன் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில்  இத்தாலியைச் சேர்ந்த இரண்டு பேர் உட்பட  7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் 8  பேர் காயம் அடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இவ் விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.