சற்று முன் நேர்ந்த விபத்து 8 வயது சிறுமி பலி..!

 

அம்பன்பொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதெணிய - அநுராதபுரம் வீதியில், நெலும்பத்வெவ சந்தி அருகே, பாதெணியவிலிருந்து அநுராதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, வீதியைக் கடந்து சென்ற சிறுமி மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

 இதில் படுகாயமடைந்த சிறுமி, அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.


உயிரிழந்த சிறுமி 8 வயதுடைய அம்பன்பொல பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.


உயிரிழந்த சிறுமியின் சடலம் அம்பன்பொல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.


அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.