அநுர அரசின் அதிரடி அறிவிப்பு..!

 

பது சக்தி” என்ற பெயரில் வரி வாரம் ஒன்றை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் யூ.டி.என். ஜயவீர தெரிவித்தார். 

நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், எதிர்வரும் ஜூன் 2 முதல் 7 வரை ஒரு வார காலத்திற்கு இந்த வரி வாரம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும், இதன் மூலம் வரி செலுத்துதல் தொடர்பாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 

“இதுவரை 10 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் TIN (வரி அடையாள இலக்கம்) வழங்கியுள்ளது. ஆனால், இந்த இலக்கங்கள் பல்வேறு தகவல் மூலங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டவையாகும். எனவே, மக்களுக்கு நாம் குறிப்பாகக் கூற விரும்புவது, உங்களுக்கு ஏற்கனவே திணைக்களத்தால் TIN இலக்கம் வழங்கப்பட்டிருக்கலாம். ஆகவே, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையதளத்திற்கு சென்று, உங்கள் அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி உங்களுக்கு TIN இலக்கம் வழங்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க முடியும். TIN இலக்கம் இல்லாதவர்கள், திணைக்களத்திற்கு நேரடியாக வராமல், முதலில் இணையதளத்தில் சரிபார்க்கலாம். ஏற்கனவே TIN இலக்கம் இருந்தால், அதன் அச்சிடப்பட்ட பிரதியைப் பெற முடியும்,” என்று ஜயவீர மேலும் கூறினார்

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post