கொழும்பு மாணவி உயிரிழப்பு தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!

 கொழும்பு கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் தொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபை National Child Protection Authority தனி விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அதிகாரசபையின் தலைவர் திருமதி பிரீத்தி இனோகா ரணசிங்க,

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் ; விசாரணைக்கு 10 பேரடங்கிய குழு நியமனம் | Colombo School Girl Death 10 Member Committee

மாணவியின் மரணம் தொடர்பில் வீசரணை நடத்த பத்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.

கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பதினைந்து வயது சிறுமி ஒருவர், பாடசாலை ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதால், மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார்.

அந்த மாணவிக்கு தனியார் வகுப்பிலும் மன உளைச்சல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாணவி உயரமான கட்டிடத்திலிருந்து குதித்து தன்னுயிரை மாய்த்துக்கொண்டார்.

மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , நாடளுமன்றத்திலும் மாணவிக்கு நீதிகோரி விவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post