பகிடி வதை வேணாம் என கூறிய மாணவி-கன்னத்திலே அப்பிய மாணவன்-கிழக்கு பல்கலைகழகத்தில் அரங்கேறிய சம்பவம்..!

 

கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த மாணவன் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை (23) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த பல்கலைக்கழகத்தில் விவசாய பீடத்தில் 3ம் ஆண்டில் கல்வி கற்று வரும் மாணவர்கள் புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாத்தின் போது மாணவி ஒருவர் பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சக மாணவன் ஒருவர் மாணவியை கன்னத்தில் தாக்கியதில் மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவியை தாக்கிய சக மாணவனை வெள்ளிக்கிழமை (23) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மாணவனை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணையை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post