யாழில் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலே பலி-வெளியான காரணம்..!

 

யாழில் நேற்றைய தினம் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கு பகுதியைச் சேர்ந்த இராமசாமி சிறிகாந்தன் (வயது 48) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குடும்பஸ்தர் நேற்றைய தினம் பழைய பொலிஸ் நிலைய வீதி, சுன்னாகம் பகுதியில் பூவரசு மரத்தின் தடியை வெட்டியுள்ளார்.


இதன்போது அந்த தடி மின் கம்பியில் விழுந்து அவர் மீது மின்சாரம் கடுமையாக தாக்கியதால் நிலத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


பின்னர் அவரது சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.



இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post