விமான நிலையத்தில் இரு அழகிகள் கைது-வெளியான காரணம்..!

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (25) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை மற்றும் ஹுனுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் நேற்றைய தினம் அதிகாலை வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 290 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post