ஓமான் சென்ற குடும் பெண் மாயம்-தவிக்கும் பிள்ளைகள்..!

 மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இருந்து வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என பெண்ணின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை மஜீத் ஆலிம் வீதியைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தாயான ஹயாத்து முகம்மது ஐதுறூஸ் நௌபியா என்பவர் பணிப்பெண்னாக வெளிநாடு சென்றுள்ளார்.

ஓமான் சென்ற மட்டக்களப்பு பெண் மாயம்; குடும்பத்தினர் கவலை | Batticaloa Woman Who Went To Oman Goes Missing

குறித்த பெண் 15 வருடங்களுக்கு முன்னர் துபாய் நாட்டுக்குச் சென்றவர் அங்கிருந்து ஓமான் நாட்டிற்கு சென்று பணிப் பெண்னாக வேலை செய்து வந்த நிலையில் அவரது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

பெண்ணை அனுப்பிய முகவர் நிலையம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் போன்றவைகளிலும் இவரை கண்டுகொள்ள பல முயற்சி செய்தும் இதுவரை எவ்விதமான பயனும் கிடைக்கவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.

ஓமான் சென்ற மட்டக்களப்பு பெண் மாயம்; குடும்பத்தினர் கவலை | Batticaloa Woman Who Went To Oman Goes Missing

இந்நிலையில் ஓமானில் இருக்கும் நபர்கள், குறித்த பெண் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அவரது சகோதரர் சாஜஹான் என்பவரின்   தொலைபேசி இலக்கத்துடன் 0096565850217 தொடர்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்குமாறு குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post