Type Here to Get Search Results !

இலங்கையில் இரு சிறுமிகளை நாசம் செய்ய முயற்ச்சித்த ஆட்டோ சாரதிக்கு நேர்ந்த கதி..!

 

இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.

ஹாலிஎல உடுவரை 7 ம் கட்டை மேற் பிரிவைச் சேர்ந்த 42 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவரை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 1 மற்றும் 2 இல் கல்வி கற்கும் 6 மற்றும் 7 வயதுடைய இரண்டு மகள்மாரும் வீட்டில் தனிமையில் இருந்த போது சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்ததாக சிறுமிகளின் பெற்றோரினால் ஹாலிஎல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதற்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad