சுகாதார அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

 மருத்துவ சுகாதார பணியாளர்கள் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்வது குறித்து ஜெனீவாவில் இடம்பெற்ற உலக 

சுகாதார மாநாட்டில் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சர் நளிந்தஜெயதிஸ்ஸ இதன் காரணமாக இலங்கையின் சுகாதார துறைக்கும் பொருளாதாரத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


2022 முதல் 2025 முதல் ஆயிரக்கணக்கான சுகாதார பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

726 மருத்துவர்கள்,116 மருத்துவ அதிகாரிகள்,2800 மருத்துவதாதிகள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர் என சர்வதேச மாநாட்டில் தெரிவித்துள்ள அமைச்சர் எங்கள் சுகாதார பணியாளர்களை உருவாக்குவதற்கு பெருமளவு பணத்தை செலவிட்ட பின்னர் நாங்கள் தற்போது குறிப்பிடத்தக்க நிதி இழப்பை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post