Type Here to Get Search Results !

தகாத உறவின் விபரீதம்-கணவனை உயிரோடு புதைத்த மனைவி-நெஞ்சை உலுக்கும் பகீர் தகவல்கள்..?

 

கள்ளக்காதல் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதிலும் கணவன்மார்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். உத்தரபிரதேசத்தில் தாலி கட்டிய கணவனை உயிரோடு மண்ணில் தோண்டி புதைத்துவிட்டார். 

இதை பார்த்த ஒரு கணவர், தன்னுடைய உசுரை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதற்காக, கள்ளக்காதலில் இறங்கிய தன்னுடைய மனைவியை, அந்த கள்ளக்காதலனுக்கே திருமணம் செய்துவைத்துவிட்ட நிகழ்வும் நம்முடைய நாட்டில் அரங்கேறியது. நம்முடைய திருச்சியிலும் ஒரு கொடுமை நடந்தது.. அதற்கான உரிய தண்டனையையும் நீதிமன்றம் தற்போது தந்துள்ளது. 

திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லை தெருவை சேர்ந்தவர் ஷேக்தாவூது. இவருக்கு 40 வயதாகிறது. தையல்காரராக உள்ளார். இவர் பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். 

மனைவி பெயர் ரகமத் பேகம் என்கிற யாஸ்மின். 31 வயதாகிறது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உண்டு. இவர்களது வீட்டின் முதல் தளத்தில் ஷேக் தாவூத்தின் தங்கை கணவரான அப்துல் அஜீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

இப்படிப்பட்ட சூழலில், அப்துல் அஜீசுக்கும், ரகமத் பேகம் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் கணவர் ஷேக் தாவூதுக்கு தெரிந்துள்ளது. இதனால் மனைவியை கண்டித்திருக்கிறார். பிறகு, குடும்பத்தினர் அனைவருக்குமே தெரிந்துவிடும், கள்ளக்காதல் ஜோடியை கண்டித்து அறிவுரை தந்துள்ளார்கள். ஆனாலும் இருவருமே அவர்களின் பேச்சை கேட்காமல் உறவை தொடர்ந்தனர். இதனால், ஷேக் தாவூதுவிற்கும், ரகமத் பேகத்துக்கும் தினமும் தகராறு வெடித்தது. தங்களது கள்ள உறவுக்கு கணவர் குறுக்கே நிற்பதால், அவரை கொன்றுவிட ரகமத் பேகமும், அப்துல் அஜீஸூம் பிளான் போட்டனர். 

இந்நிலையில், கடந்த 2021, ஜூன் மாதம் 2ம் திகதி, ஷேக் தாவூதுவிற்கு திடீரென உடம்பு சரியில்லாமல் போனது. இதையே சாக்காக பயன்படுத்திக்கொண்ட ரகமத் பேகம், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கணவரை அழைத்து சென்றார். அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தார். பிறகு அதற்கான மாத்திரைகள் வந்து, கணவரை அன்பாக கவனித்து கொள்வது போல நடித்தார். 

ஆனால், 2 நாள் கழித்து, அதாவது, 4 ஆம் டொக்டர்கள் எழுதி கொடுத்த மாத்திரைகளுக்கு பதிலாக 10 தூக்க மாத்திரைகளை அப்துல் அஜீஸ், ரகமத் பேகத்திடம் தந்துள்ளார். மறுநாள் 5ஆம் திகதி இரவு 5 தூக்க மாத்திரைகளை கணவருக்கு தந்து சாப்பிட வைத்துள்ளார். கணவரும் அதை சாப்பிட்டதுமே தூங்கிவிட்டார். 

பிறகு நள்ளிரவு 2 மணிக்கு, ஷேக் தாவூதுவின் முகத்தில் கள்ளக்காதலன் அழுத்த, கணவரின் இரண்டு கால்களையும் கெட்டியாக அமுக்கி பிடித்துக்கொண்டாராம் மனைவி. பிறவியிலேயே வாய் பேச முடியாத ஷேக்தாவூது , திமிறிக்கொண்டு முனகல் சத்தம் எழுப்பியிருக்கிறார். 

இந்த சத்தம் கேட்டு அவரது பெரியப்பா மகன் சபீ என்பவர் ரூமுக்குள் நுழைந்து, என்னாச்சு? என்று கேட்டுள்ளார். அதற்கு ரகமத் பேகம், இது எங்கள் குடும்ப பிரச்சினை, இதில் தலையிட்டால் உன்னையும் கொன்று விடுவோம் என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோன சபீ அங்கிருந்து அலறி வெளியே வந்துவிட்டார். பிறகு மீண்டும் கணவரை தலையணையால் அழுத்தவும், அவர் மூச்சு திணறி இறந்துவிட்டார். காலை 7 மணிக்கு, உடல்நலம் மோசமாகி இறந்துவிட்டதாக நாடகமாடினார் மனைவி. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad