ஓமந்தை கொடூர விபத்து-இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள்….!

 

வவுனியா ஓமந்தை பகுதியில் கடந்த 26ம் திகதி அதிகாலை ஏற்பட்ட விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன் அவரது குடும்பத்தினர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் 

குறித்த விபத்தின் போது வீதியால் பயணித்த இளைஞர் ஒருவர் காயப்பட்டவர்களை உடனடியாக வீதியால் சென்ற வாகனம் ஒன்றை நிறுத்தி அதன்மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளார் இதன்போது காயமடைந்தவர்களின் உடைமையில் இருந்த ஒரு தொகை பணம், மற்றும் நகைகள், கையடக்க தொலைபேசி என்பனவற்றை குறித்த இளைஞர் பாதுகாப்பாக பத்திரப்படுத்தியிருந்துள்ளார்  

நேற்றைய தினம் அந்த இளைஞர் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்களை தொடர்பு கொண்டு குறித்த விடயத்தை கூறியிருந்தார், உயிரிழந்தவர் யாழ் இந்திய துனைதூதரகத்தில் பணியாற்றியவர் என்பதுடன் குறித்த ஊடகவியலாளருடன் நெருக்கத்தில் இருந்தவரும் எனவே கார்த்தீபன் அவர்கள் யாழ் இந்திய துனை தூதுவரை தொடர்புகொண்டு குறித்த விடயத்தை கூறி அந்த இளைஞரையும் அவருடன் தொடர்புபடுத்தியிருந்திருந்தார்

அதனை தொடர்ந்து அந்த இளைஞர் நேற்றைய தினமே யாழ் இந்திய துனைதூதுவராலயத்திற்கு சென்று குறித்த பொருட்களை அவர்களிடம் 

ஒப்படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

குறித்த மனிதாபிமான செயலை செய்தவர் வவுனியா புளியங்குளத்தை பூர்வீகமாகவும் தற்பொழுது சிதம்பரபுரத்தில் வசித்து வரும் 34 வயதுடைய செல்வராசா நிரோசிகன் என்பவராகும் இவர் ஒரு பேருந்து சாரதி என்பதும் குறிப்பிடத்தக்கது 

குறித்த இளைஞர் மக்களிடத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார் அதாவது வீதிகளில் விபத்துக்கள் ஏற்பட்டால் அருகில் இருப்பவர்கள் உடனடியாக உதவிகளை செய்து குறித்த உயிர்களை காப்பாற்ற முன்வாருங்கள் என்றும் அப்படியான சந்தரப்பங்களில் வேறு எந்த நோக்கமும் இல்லாது பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை பாதுகாத்து அவர்களிடம் ஒப்படைக்குமாறும் விபத்து எல்லோருக்கும் ஏற்படும் அதனை மனதில் வைத்து செயல்படுங்கள் என்று கோரிக்கை ஒன்றையும் முன்வைத்திருந்தார்.






இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post