அநுர அரசின் அடுத்த திட்டம்..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேலும் இரண்டு அமைச்சர்களை நியமிக்க உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவையில் தற்பொழுது 23 பேர் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த எண்ணிக்கையை 25 ஆக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரங்களில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அல்லது பிரதி அமைச்சர் முனிர் முலாபருக்கு ராஜாங்க அமைச்சர் அல்லது அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் புதிய ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது

எவ்வாறெனினும் இந்த அமைச்சரவை மாற்றம் தொடர்பில் ஆளும் தரப்பில் அதிகாரபூர்வமாக இதுவரையில் அறிவிப்புக்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post