திருமலையிலும் துப்பாக்கி சூடு-குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்..!

 

திருகோணலை - சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சேருவில பகுதியில் வைத்து நபர் ஒருவர் மீது கட்டுத்துவக்கினால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 46 வயதுடைய நபர் படுகாயமடைந்துள்ளதோடு இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கு தீ வைத்து எரித்து விட்டு சந்தேக நபர் தப்பித்துச் சென்றுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

முன் பகை காரணமாக சேருவில பகுதியில் வைத்து நபரொருவர் மீது கட்டுத் துவக்கினால் சூடு நடத்திய நபர் மீண்டும் நூறு வீட்டுத் திட்டம் பகுதிக்குசென்று  ஏனைய இருவரது இரண்டு மோட்டார் சைக்கிள்களை தீ வைத்து எரித்து விட்டுச் தப்பித்துச் சென்றுள்ளார்.

துப்பாக்கிச்சூடு, தீ வைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 45 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் இணங்கண்டுள்ளார்.

எனினும் அவர் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் சேருநுவர பொலிஸார் சந்தேக நபரைத் தேடி வலைவிதித்துள்ளதுடன் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post