திருமலையிலும் விபத்து-இருவருக்கு நேர்ந்த துயரம்..!{படங்கள்}

 திருகோணமலை - திருஞானசம்பந்தர் வீதியில் இன்று (25) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக வீதியின் சந்திக்கு அருகே நகரத்தில் இருந்து வெளியேறிய மினிவேனும், நகரை நோக்கி பயணித்த  மோட்டார் சைக்கிளும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

மினிவேனை செலுத்தி வந்தவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post