யாழில் மாணவர்களை கதிரையால் அடித்து துவைத்த ஆசிரியர்..!

 

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தாக்கியதில் 5க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர், வகுப்பு ஒன்றுக்குச் சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி கேட்டபோது மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்கியது உண்மை எனவும் ஆனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பாடசாலை என்ற வகையில் நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post