Posts

யாழில் செய்தி சேகரிக்க சென்றவர் மீது தேசிய மக்கள் சக்தி ஆதரவளார்கள் அடி-உதை..!

 யாழ்ப்பாணம் வேலணை துறையூரில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை NPP கட்சியின் ஆதரவுக் குழு ஒன்று தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று நடைபெறும் உள்ளூர் அதிகார சபை தேர்தல் தொடர்பில் வேலணை பிரதேசத்தின் கள நிலைவரங்களை செய்தி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுட்டுக் கொண்டிருந்தார்.

யாழில் ஊடகவியலாளர் மீது NPP ஆதரவுக் குழு தாக்குதல் | Npp Support Group Attacks Journalist In Jaffna

அவ் வேளை, வேலணை துறையூர் ஐயனார் வித்தியாலய வாக்காளர் மையத்தின் அருகே NPP யின் ஆதரவாளர்கள் இன்னொரு தரப்பு ஆதரவாளர்களுடன் கைகலப்பில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஊடகவியலாளர் அந்த சம்பவத்தை வீடியோ செய்தியாக சேகரித்துக் கொண்டிருந்த போதே குறித்த NPP குழு ஊடகவியலாளரை தாக்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளரால் ஊர்காவற்றுறை பொலிசில் முறைப்பாடு செய்யப்படுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.