Posts

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு வாளுடன் சென்ற இளைஞர்கள்..!

 கிளிநொச்சி செல்வாநகர் வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக வாள்களுடன் நின்ற இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாக்குச்சாவடிக்கு முன்பாக சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற கார் ஒன்றை பொலிஸார், இன்று (06) சோதனையிட்ட போது வாள் ஒன்றும் கத்தி ஒன்றும் காணப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் வாக்களிப்பு நிலையத்திற்கு வாளுடன் வந்த இளைஞர்கள் | Youths Carrying Swords Polling Station Kilinochchi

இதையடுத்து காரில் வந்த இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், வாளும் கத்தியும் கைப்பற்றப்பட்டு, அவர்களது காரும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.