Posts

இலங்கையை உறைய வைத்த கோர விபத்து-குழந்தையை காப்பாற்றி உயிர் துறந்த தாயின் இறுதி யாத்திரை..!

 கொத்மலை விபத்துகுள்ளான பேருந்தில் தன்னுயிரை தியாகம் செய்து, தன்னுடைய பிள்ளையின் உயிரை காப்பாற்றிய தாயின் இறுதி கிரியை, இன்று (13) மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று, கொத்மலை பொலிஸ் பிரிவின் கரடி எல்லா பகுதியில் நேற்று முன் தினம் (11) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 22 பேர் உயிரிழந்துள்ளனர், 45 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; கவனம் ஈர்த்த தாயின் இறுதி கிரியை | Kotmale Accident Mother S Funeral Drew Attention

இந்த விபத்தில், தனது 9 மாதங்களேயான மகளை, காப்பாற்றுவதற்கு பெரும் பாடுபட்ட தாயின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த தாய், சேயுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், அந்த தாய் உயிரிழந்தார். அவருடைய 9 மாதங்களேயான குழந்தை, பேராதனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையை உலுக்கிய கோர விபத்து; கவனம் ஈர்த்த தாயின் இறுதி கிரியை | Kotmale Accident Mother S Funeral Drew Attention

விபத்தில், தாய், தந்தை மற்றும் 9 மாதங்களேயான குழந்தையுடன், தங்களுடைய ஏனைய நான்கு பிள்ளைகளும் சிக்கியுள்ளனர்