யாழில் ஒரு பிள்ளையின் இளம் தாய்க்கு நேர்ந்த விபரீதம்-தவிக்கும் உறவுகள்..!

 

யாழ்ப்பாணத்தில், வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் மீது தீப்பற்றியதால் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். புலவர் வீதி, நவாலி வடக்கு, மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த கஜன் ஜனுயா (வயது 23) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த 20 ஆம் திகதி சமையலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதன்போது அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியவேளை அது அவரது ஆடையிலும் பட்டு தீப்பற்றியது. பின்னர் அவர் குளியலறைக்குள் சென்று தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டு, எரிகாயங்களுக்கு பற்பசை பூசியுள்ளார்.

இதன்போது அங்கு வந்த கணவர் அயல்வீட்டு பெண்ணொருவருடன் அவரை யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். தீக் காயத்தால் ஏற்பட்ட கிருமித்தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post