யாழில் நேற்றைய தினம் நிமோனியா காய்ச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பலாலி தெற்கு, வசாவிளான் பகுதியைச் சேர்ந்த கா.கிட்டுணன் (வயது 75) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த சில தினங்களாக உடல் சுகயீனமடைந்த நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
