10 வகுப்பு மாணவனை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய இரு பிள்ளைகளின் 35 வயது தாய்க்கு நேர்ந்த கதி..!

 

இந்தியாவின் மத்திய பிரதேசம் ராட்லாமில் 35 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 14 வயது மகளும் மற்றும் 9 வயது மகனும் உள்ளனர். இவர் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக 10 ஆம் வகுப்பு மாணவனிடம், தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார். இதனால் பொலிஸார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

 

அந்த பெண்ணிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில்தான் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனிடம், கடந்த ஒரு வருடமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வருகிறார். தனது வீட்டிற்கு அழைத்து திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்து வற்புறுத்தியதால், மாணவன் ஒரு கட்டத்தில் தனது தந்தையிடம் நடந்ததை கூறியுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து தந்தை பொலிஸில் புகார் அளிக்க, பொலிஸார் அந்த பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post