இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மூவாயிரத்தை அண்மித்துள்ளது.
ஹொங் கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் தலை தூக்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலும் மே மாத ஆரம்பத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியது.
கடந்த மே 26 ஆம் திகதி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,010 ஆக காணப்பட்ட நிலையில்
30 ஆம் திகதி 2,710 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலில் கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டெல்லி ஆகியவை முன்னிலை வகிப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் இதுவரை எழுவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.