இந்த ராசியினரை தவறியும் பகைக்காதிங்க விளைவு ரொம்ப மோசமா இருக்கும்... ஏன்னு தெரியுமா?


ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, விசேட  ஆளுமை, மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களுக்கு இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக குறிப்பிடப்டுகின்றது. 


அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே சற்று பழிவாங்கும் குணம் கொண்டவர்களாகவும், மிகவும் ஆபத்ததானவர்களாகவும் அறியப்படுகின்றார்கள்.

அப்படி பகைவர்களை மிகவும் மோசமான வகையில் பழிவாங்கும் குணம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.


மேஷம்

மேஷ ராசியினர்  வீரத்தின் அதிபதியாக திகழும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் இவர்களிடம் இயல்பாகவே தைரியம், வீரம், வலிமை, போர் குணம் என்பன சற்று அதிகமாகவே இருக்கும்.

இவர்கள் தங்களின் போட்டியாளர்களுக்கு எதிராக சவால்விட சற்றும் தயங்கமாட்டார்கள். இந்த ராசியினரை பகைத்துக்கொள்வது மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். 

எதிராளியை எப்படி சமாளிப்பது என்பது இவர்களுக்கு நன்கு தெரியும். இவர்களின் அகராதியில் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே இடமிருக்காது. இவர்கள் பழிவாங்க ஆரம்பித்தால் எதிரி அனைத்தையும் இழக்கும் வரையில் ஓயவே மாட்டார்கள். 


சிம்மம்

சிம்ம ராசியினர் சூரியனின் அதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால், இயல்பாகவே இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு இருக்க மாட்டார்கள். 

இவர்கள் சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். தங்களின் தன்மானத்தை பாதிக்கும் வகையில் யார் நடந்துக்கொண்டாலும் அவர்களை மிகவும் மோசமான முறையில் பழிவாங்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும். 

இவர்கள் எப்போதும் அழுத்தம் நிறைந்த இடத்தில் தொழில் செய்வதையோ அல்லது இருப்பதையோ கொஞ்சமும் விரும்புவது கிடையாது. இவர்கள் பகைவர்களை மற்றவர்கள் மிரளும் வகையில் நிச்சயம் பழிவாங்குவார்கள். 


விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மர்மமான நடத்தைகளுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஒருவரை பழிவாங்க நினைத்துவிட்டால் மிகவும் ஆபத்தானவர்களாக மாறிவிடுவார்கள். 

இந்த ராசிக்காரர்கள் கோபம் மற்றும் திட்டம் தீட்டி பழிவாங்குவதில் வல்லவர்களாக இருப்பார்கள். நண்பர்களுக்கு மிகச்சிறந்த நண்பனாகவும் எதிரிக்கு மோசமான எதிரியாகவும் இருப்பார்கள். 

இவர்கள் யாராலும் கணிக்க முடியாத குணம் கொண்டவர்கள். இருப்பார்கள். தன்னை எதிர்த்தவர்களை இவர்கள் எப்போது, எப்படி தாக்குவார்கள் என்பது குறித்து யூகிப்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால் நிச்சயம் தீவிரமாக பழிவாங்குவார்கள்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post