காதலை துண்டித்த இளைஞன்-விபரீத முடிவெடுத்த தமிழ் மாணவி..!

 

கோவையில் இன்ஸ்டா மூலம் அறிமுகமாகி காதலித்து வந்த இளைஞன் ஏமாற்றி திருமணத்திற்கு மறுத்ததால், 12ம் வகுப்பு படித்து வந்த பள்ளி மாணவி, தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதிநகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் ரமா பிரபா(17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 12ம் வகுப்பு படித்து வந்த ரமா பிரபாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் 21 வயது இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் ரமா பிரபாவுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாக தெரிகிறது. 


இதனால் அவர் மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.


அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்த நிலையில், அந்த இளைஞர் ரமா பிரபாவைக் காதலிக்க மறுத்து குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படுகிறது.


இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்த ரமா பிரபா, வீட்டில் தனியாக இருந்த நிலையில், திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.


அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.


இது குறித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் காதல் தோல்வியில், மாணவி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post