Type Here to Get Search Results !

பிரதமர் பதவியில் மாற்றமா-அநுர அரசு வெளியிட்ட தகவல்..!

 

அமைச்சரவை மாற்றம் அல்லது பிரதமர் மாற்றம் தொடர்பிலான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை மறுசீரமைப்பு செய்து பிரதமர் பதவியை மாற்றி நளிந்த ஜயதிஸ்ஸ அல்லது பிமல் ரத்நாயக்கவுக்கு வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை வலியுறுத்தினார்.

எதிரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக சில ஊடகங்களுடன் இணைந்து வெளியிடப்படும் தவறான செய்திகள் இவை என்றும் அமைச்சர் கூறினார்.

எந்த வகையான அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்தும் எந்த விவாதமும் நடத்தப்படவில்லை எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad