யாழில் ஆட்டு கள்ளரை பொறி வைத்து பிடித்த பொலிசார்..!

 

மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு ஆடுகளை திருடிய குற்றச்சாட்டில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சாவகச்சேரி - தச்சன் தோப்பு பகுதியில் ஆறு ஆடுகள் களவாடப்பட்டிருந்தன.

இது குறித்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்தவகையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் நெறிப்படுத்தலின் கீழ், சாவகச்சேரி பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினர் இது குறித்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த வாகனங்களின் தகட்டு இலக்கங்களை பெற்று அதன் மூலம் விசாரணைகளை மேற்கொண்டதன் அடிப்படையில் அந்த வாகனம் புத்தளம் மாவட்ட பதிவில் இருந்தமையும், அந்த வாகனத்தை துன்னாலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாங்கியமையும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் நேற்றிரவு நெல்லியடி - துன்னாலை பகுதியில் வைத்து களவுக்கு பயன்படுத்திய வாகனத்தையும், 5 ஆடுகளையும் மீட்டதுடன் இரண்டு சந்தேக நபர்களையும் கைது செய்தனர். 

இந்நிலையில் விசாரணைகளை அடுத்து சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post