காரை முந்தி செல்ல விடாமல் மோட்டாரில் சென்ற சாரதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

 

தனது காரை முந்திச் செல்ல விடாமல் தடுத்த மோட்டார் சைக்கிள் சாரதியை துப்பாக்கியை காட்டி மிரட்டியதற்காக காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்த 9MM உரிமம் பெற்ற கைத்துப்பாக்கியும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

நுகேகொட, மஹாசென் மாவத்தையிலிருந்து, தலவதுகொட நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் பின்னால், ​​சந்தேக நபர் பிராடோ ஜீப்பில் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிராடோ பல சந்தர்ப்பங்களில் மோட்டார் வாகனத்தை முந்திச் செல்ல முயன்றது, 

ஆனால் வாய்ப்பு இல்லாததால், அதன் சாரதி கோபமடைந்து தலவதுகொட சந்திக்கு அருகில் ஜீப்பை நிறுத்தியுள்ளார்.

தன்னிடம் இருந்த துப்பாக்கியைக் காட்டி மோட்டார் சைக்கிள் சாரதியை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் மோட்டார் சைக்கிள் சாரதி அளித்த புகாரின் பேரில், பிராடோ  சாரதி துப்பாக்கியுடன்   கைது செய்யப்பட்டுள்ளார்.