சற்று முன் நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை..!

 

நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுமாயின் அது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு நாட்டில் பொது மக்களுக்கு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், டெங்கு நோயினால் கடந்த ஆண்டில் மாத்திரம் நாட்டில் 14 மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், குறித்த காலப்பகுதியில் 26,775 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் பதிவு செய்யப்படுகின்றனர். நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

எனவே, தங்களது குடியிருப்புகள் மாத்திரமன்றி பணியிடங்கள், மதஸ்தலங்கள் மற்றும் தங்களது பிள்ளைகள் செல்லும் பாடசாலைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் நுளம்பு பெருகுவதற்கான சூழல் காணப்படுமாயின், அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும்.

வாரத்திற்கு ஒருமுறையேனும் சுற்றுச்சூழலைச் சுத்தப்படுத்தி டெங்கு நுளம்புகள் பரவுவதனை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கூறியுள்ளார். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post