Type Here to Get Search Results !

பல வீடுகளை உடைத்து விளையாட்டு காட்டிய இளைஞன் ஆபத்தான பொருளுடன் சிக்கியது எப்படி..?

 பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் மொரட்டுவை பொலிஸாரால் நேற்று  (05) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கொழும்பு மொரட்டுவை பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல வீடுகளில் கைவரிசையை காட்டிய இளைஞன் ; சோதனையில் ஆபத்தான பொருட்கள் | Young Burglar Caught Weapons Recovered

கைதுசெய்யப்பட்டவர் களுத்துறை - பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞன் ஆவார்.

சந்தேக நபர் மோட்டார் சைக்கிள் மற்றும் பல்வேறு வீடுகளின் கதவுகளை உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 02 கிராம் 520 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad