திருமலை ஊடகவியலாளர் மரணம்-மனைவி வெளியிட்ட தகவல்..!

 


திருகோணமலை (Trincomalee) – கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளர் பிரியான் மலிங்க (வயது 34) மரணமடைந்ததற்கான பின்னணி குறித்து தற்போது சந்தேகங்கள் எழுந்துள்ளன.


இந்நிலையில், தனது கணவரின் மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த மே மாதம் 17ஆம் திகதி இரத்தினபுரியில் உள்ள மனைவியின் வீட்டிலிருந்து கந்தளாய் நோக்கிச் சென்றபோது ஹபரண கல்வங்குவ என்ற இடத்தில் அதிகாலை 1.40 மணியளவில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதாக ஹபரண காவல்துறையினர் தெரிவித்தனர்.


இன்று வரை 23 நாட்கள் கடந்தும் சம்பந்தப்பட்ட விபத்துக்கான விசாரணையில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.


நான் பல இடங்களில் இருந்து CCTV காட்சிகள் பெற்று ஹபரண காவல்துறையினரிடம் வழங்கியிருந்தும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரியான் மலிங்கவின் மனைவி தெரிவித்துள்ளார்.


இது ஒரு அலட்சியமான அணுகுமுறையாகவே இருக்கிறது என அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பிரியான் மலிங்க ஒரு கடமை உணர்வுள்ள ஊடகவியலாளராக பல சமூக பிரச்சினைகளுக்கு குரலாக இருந்தவர். அவரது மரணம் குறித்து முழுமையான மற்றும் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post