திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்-பதறி ஓடிய பெற்றோர்கள்..!

 

மட்டக்களப்பு,  கரடியனாறு பகுதியில் பாடசாலை ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமையினால்  வயிற்றுவலி ஏற்பட்ட நிலையில், 22 மாணவர்கள் வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (30) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் சத்துணவு திட்டத்தின் கீழ் சோறுடன் கோழி இறைச்சிகறி தயாரித்து சம்பவதினமான இன்றைய தினம் பகல் 195 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனை உட்கொண்ட  சில மாணவர்களுக்கு வயிற்றுவலி ஏற்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக அருகிலுள்ள கரடியனாறு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலதிக சிகிச்சைக்காக 16 மாணவர்களை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பொதுசுகாதார பாசோதகர்கள் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்த சம்பவத்தையடுத்து பாடசாலையில் முன் பெற்றோர்கள் ஒன்று திரண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேவேளை கடந்த மாதம் இதே பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 25 மேற்பட்ட  மாணவர்கள் வாந்தி, மயக்கம் காரணமாக வைத்தியசாவையில் அனுமதிக்கப்பட்டதுடன்,  உணவு வழங்கிய பெண்ணை கைது செய்ய்யப்பட்டமை குறிப்பிடதக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post