சற்று முன் பிரபல வைத்தியர் அதிரடி கைது-வெளியான காரணம்..!

 கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது! | Colombo Hospital Neurosurgeon Arrested

 சந்தேக நபர்களான வைத்தியரும் பணியாளரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

மூன்றாம் தரப்பு நபர்கள் ஊடாக மருந்துகளை அதிக விலையில் விற்றதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post