சற்று முன் சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு..?

 ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் மண்மேடு சரிந்து விழும் அபாயம் உள்ளதால் குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை தொடர்ந்து அங்குள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையக பகுதிகளில் பயணிக்கும் சாரதிகளுக்கு விடுக்கபட்ட முக்கிய அறிவுறுத்தல் | Important Warning Issued To Hill Country Drivers

இதன்படி, காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகல்ல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமானது வன்பாயும் அளவை எட்டியுள்ளதாக குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்..

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் காற்று, மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய மலைநாட்டின்; மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணிக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அத்துடன், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும். 

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post