மேலும் மூன்று மாணவிகள் துஸ்பிரயோகம்-வெளியான அதிர்ச்சி தகவல்..!

 14 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நேற்று (16) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.

நுகேகொடை, பொரளை மற்றும் நாவின்ன ஆகிய இடங்களில் வசிக்கும் 14 வயதுடைய மூன்று பாடசாலை மாணவிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதின்ம வயது சிறுமிகள் மூவர் துக்ஷ்பிரயோகம்; விசாரணை ஆரம்பம் | Abuse Of 3 Teenage Girls The Investigation Begins

இதனை கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்ற பெண் தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் சாமந்தி ரேணுகா, கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்தார்.

இந்த புகார்கள் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்குமாறு சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.