வாகன இலக்க தகடுகள் தொடர்பில் சற்று முன் வெளியான தகவல்..!

 

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் பணிகள் ஒரு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையால், சுமார் 15 ஆயிரம் வாகனங்களுக்கு வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது 

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் கமல் அமரசிங்க இதனை தெரிவித்துள்ளார். 

வாகன இலக்கத்தகடுகளை அச்சிடும் நிறுவனத்துக்கு பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி முதல் அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன. 

அத்துடன், வாகன இலக்கத்தகடுகளை அச்சிடுவதற்கு புதிய நிறுவனத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

இதுவரை 15 நிறுவனங்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்துள்ளதாக மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post