Type Here to Get Search Results !

சாரதி அனுமதி பத்திரங்கள் தொடர்பில் சற்று முன் வெளியான அதிர்ச்சி தகவல்..!

 

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின்றது.

இது தொடர்பான பரிந்துரை மற்றும் கோரிக்கைகள் பொலிஸ் திணைக்களம் ஊடாக பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமே இதற்கு முழுப் பொறுப்பாவதால், இது தொடர்பாக விரைவில் அந்தத் திணைக்களம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ளதுடன், அதில் 4 மில்லியனுக்கும் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெற்ற சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ளனர்.

இவற்றில், இரண்டு மில்லியனுக்கும் அதிகமானோர் கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் வைத்துள்ளதால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, 2009 ஆம் ஆண்டுக்கு முன்பு பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களை ரத்து செய்யும் புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad