மூதாட்டியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய இளைஞன் ; சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு

 

மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர், தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.

அவரது சடலம், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்தனர்.

2025 ஜனவரி மாதத்தில் தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்த, திருமணமாகாத 52 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே ஜூன் 5 ஆம் திகதியன்று கைப்பற்றப்பட்டது.

சந்தேகநபர், ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து பிரதேசத்தை விட்டு தலைமறைவாகி இருந்தார்.

அந்த நபரின் சடலம், மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்டது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post