நீதிமன்ற அபராதத் தொகையை செலுத்திய இளம் அழகி அதிரடி கைது-வெளியான அதிர்ச்சி காரணம்..!

நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையை போலி நாணயத்தாளைக் கொண்டு செலுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்துவதற்காக போலி நாணயத்தாள்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அம்பலந்தொட்டை பெரகம பகுதியைச் சேர்ந்த 28 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

8000 ரூபா அபராதத் தொகையை செலுத்துவதற்காக இந்தப் பெண் போலி ஐயாயிரம் ரூபாய் நாணயத்தாளை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் காசாளர், போலி நாணயத்தாளை அடையாளம் கண்டு, அது குறித்து நீதிமன்ற காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில், குறித்த பெண்ணை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post