வீட்டில் உள்ள மலசலகூடத்திற்கு சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி-மாயமான கொமட்..!

 

கழிப்பறை கொமட்டை  திருடிய ஒருவரை வெல்லவாய பொலிஸார் கடந்த 15 ஆம் திகதி கைது செய்தனர். வெல்லவாய காவல் பிரிவின் வேவலவத்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த கழிப்பறை கொமட்டை யே இவர் திருடியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் 64 வயதுடையவர், தனது மகன் வசிக்கும் நாவலப்பிட்டி பகுதிக்குச் சென்றிருந்தார். இதனிடையே, வீட்டின் அருகே வசிக்கும் ஒருவர் வீட்டின் அருகே ஒரு நபர் கொமட்டை  வைத்திருப்பதாகவும், அவர் சந்தேகத்திற்குரியவராக இருப்பதாகவும் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதன்படி, கடந்த 15 ஆம் திகதி வீட்டிற்குச் சென்றபோது, ​​வீட்டின் பின்புறக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டிற்குள் நுழைந்த ஒருவர் கழிப்பறை கொமட்டை   திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.இந்த கழிப்பறை கொமட்டை  மதிப்பு முப்பத்தைந்தாயிரம் ரூபாயாகும்.

சம்பவம் குறித்து விசாரணை நடத்திய வெல்லவாய பொலிஸார், வெல்லவாய, திஸ்ஸா சாலையில் வசிக்கும் 47 வயது சந்தேக நபரை கழிப்பறை கொமட்டுடன்  கைது செய்தனர்.

சந்தேக நபர், வழக்குப் பொருட்களுடன் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருக்கின்றார்.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post