கற்குகை காட்டு பகுதியில் பெண்ணின் சடலம்-கொலையா-வெளியான அதிர்ச்சி தகவல்..!

 மொனராகலையில் தொம்பகஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நுககஹகிவுல பிரதேசத்தில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து நேற்று  (04) பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக தொம்பகஹவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொம்பகஹவெல, நுககஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்குகையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலத்தால் பரபரப்பு | Woman S Body Found In Cave Sparks Sensation

 கொலையென  சந்தேகிக்கும் பொலிஸார்

இவர் கடந்த 02 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக தொம்பகஹவெல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், காணாமல்போன பெண்ணின் சடலம் வனப்பகுதியில் அமைந்துள்ள கற்குகையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சடலமானது சியம்பலான்டுவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தொம்பகஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post