மது போதையில் ஆபாச நடனமாடிய ஐயர்மார்-பெண்கள் மீதும் வீபூதி அடித்து பேயாட்டம்..!

 

 விருதுநகர் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர், வீட்டில் மது அருந்தி விட்டு ஆபாச நடனம் ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. 


இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 


என்ன நடந்தது ஸ்ரீவில்லிப்புத்தூரில்?


விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் 4 பேர் மது அருந்திவிட்டு ஆபாச நடனமாடிய வீடியோ வெளியானது. 


இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் மீது அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள பெரிய மாரியம்மன் கோயிலில் வரும் ஜூலை 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டதையடுத்து, கும்பாபிஷேக பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன


இந்நிலையில், இந்த கோயிலில் உதவி அர்ச்சகராக 30 வயதுடைய கோமதிவிநாயகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார்... இவரது வீட்டில், கும்பாபிஷேக பணிக்கு வந்த அர்ச்சகர்கள் சிலர் தங்கியிருக்கிறார்கள்.. இவர்களில் சில அர்ச்சகர்கள் மது குடித்துவிட்டு வீட்டில் ஆபாசமாக டான்ஸ் ஆடியதாக தெரிகிறது.


இந்த அர்ச்சகர்கள் டான்ஸ் ஆடியதை, கோயில் முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் என்பவர் வீடியோ எடுத்துவிட்டார்.. இந்த வீடியோவை அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு அனுப்பிவைத்து, புகாரும் கூறியிருந்தார்.


இதனை தவிர, கோயில் வளாகத்தில் பணிபுரியும் பெண்கள் மீது விபூதி அடித்து அர்ச்சகர்கள் விளையாடியதாக கூறி, மற்றொரு வீடியோவையும் சபரிநாதன் தன்னுடைய புகாருடன் சேர்த்து அனுப்பிவிட்டார். ஆனால், தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது கோமதிவிநாயகமும் போலீசில் புகார் தந்தார்..


இதற்கு நடுவில், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி இந்து முன்னணி சார்பில் கோயில் நிர்வாகிகளிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.


இந்த புகார்களின் பேரில், கடந்த 15-ம் தேதி அர்ச்சகர் சுந்தர் மது அருந்திவிட்டு பணியில் ஈடுபட்டது மருத்துவப் பரிசோதனையில் உறுதியானது..


இதையடுத்து, சம்பந்தப்பட்ட அர்ச்சகர்களிடம் அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

பிறகு விசாரணையின் முடிவில் செய்தியாளர்களிடம் அதிகாரிகள் சொல்லும்போது, "உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 4 பேரும் கோயிலில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள்.. 


கோயில் பூஜை விவகாரங்களில் இனி அவர்கள் தலையிட முடியாது.. அதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.. அர்ச்சகர் சுந்தர் மீது கும்பாபிஷேகத்துக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். துறை ரீதியிலான விசாரணையும் நடந்து வருகிறது" என்றார்கள்.


இதனிடையே, உதவி அர்ச்சகர், தன்னை 2 பேர் தாக்கியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் திடீரென புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக நகர் போலீசார் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்..

அர்ச்சகர் கோமதிவிநாயகம் உள்ளிட்ட 3 உதவி அர்ச்சகர்கள் போதையில் டான்ஸ் ஆடும் வீடியோ, இணையத்தில் பரவி பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post