நாட்டு மக்களுக்கு மற்றுமொரு நிவாரணம்-சற்று முன் வெளியான மகிழ்ச்சி தகவல்..!

 

நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக உபக்குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக அதிகாரமளித்தல் தொடர்பான அமைச்சக ஆலோசனைக் குழுவால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

நுண்நிதி கடன்களால் கிராமப்புறப் பெண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனைக் கருத்தில் கொண்டு அமைச்சகக் குழு உறுப்பினர்களின் முன்மொழிவின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். 

அதன்படி, இவ்விடயம் குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை முன்மொழிய, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க தலைமையில் உபக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் நுண்நிதி கடன் பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதற்காக, தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து விவாதிக்கவும், பொருத்தமான திட்டங்களை முன்வைக்கவும் இந்தக் குழு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறினார்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post