யாழ் செம்மணி புதைகுழி-தோண்ட தோண்ட வரும் எம்மினத்தின் உயிரற்ற என்புகளின் எச்சங்கள்-சிறு குழந்தையும் விட்டு வைக்காத கொடூரம்..!

 யாழ்ப்பாணம் செம்மணி - சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தப் புதைகுழி மிகப்பெரியதாக இருக்கலாம் என்ற அச்சம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில், நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தற்போது அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

யாழ் செம்மணி மனிதப்புதைகுழியில் மீட்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு | Infant Skull Found In Jaffna Chemmani Mass Grave

பணிகளின் ஐந்தாம் நாளான நேற்றையதினம் புதன்கிழமை சிறிய என்புத்தொகுதியொன்று அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகத்தோற்ற அளவில் அது ஒரு வயதுக்கு உட்பட்ட சிசுவுடையதாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அத்துடன் இதுவரை 13 என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் ஐந்து தொகுதிகள் முற்றாக மீட்கப்பட்டுள்ளதுடன், ஏனையவற்றை அகழும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுவரும் மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை ஆடைகள் எவையும் மீட்கப்படவில்லை.

அத்துடன், வேறு சில என்புச் சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post