தனது மனைவி ஷிரந்தியை கைது செய்ய விடாதீர்கள் என கெஞ்சிய மஹிந்த..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்க்ஷ விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்ற தகவலைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சமீபத்தில் மல்வத்தை மகா தேரரை சந்தித்து, அத்தகைய நடவடிக்கையை எடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி, மகாநாயக்க தேரரிடம் தனது மனைவியைக் கைது செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அறிவுறுத்துமாறு கோரியதாகக் கூறப்படுகிறது,

இருப்பினும் மகாநாயக்க தேரர் அந்தக் கோரிக்கையை நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.

மல்வத்த மகாநாயக்கர் திப்போட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஊழல்வாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்த நாங்கள், எப்படி வாயைத் திறந்து ஜனாதிபதி அநுரவிடம் இதைச் சொல்ல முடியும்?” என்று கேட்டிருந்தார்.

“கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அனைத்து தலைவர்களிடமும் ஊழல்வாதிகளுக்கு உரிய தண்டனை வழங்குமாறு நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

ஆனால் எத்தனை வாக்குறுதிகள் வழங்கப்பட்டாலும், யாரும் அதைச் செய்யவில்லை.

தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அவர் ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டின் பொது நிதியைக் கொள்ளையடித்த ஊழல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்றும் நாங்கள் கூறியுள்ளோம். அவர் ஜனாதிபதியான பிறகும், அவரைச் சந்திக்கும் போதெல்லாம் இந்த விடயத்தை நாங்கள் வலியுறுத்தினோம்.

இந்த நிலையில், மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டில் ஷிரந்தி ராஜபக்க்ஷவை கைது செய்யக் கூடாது என்று இப்போது எப்படி வாய் திறந்து கூற முடியும்?” என மல்வத்த மகா தேரர் முன்னாள் ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார்.

பிரபலமற்ற ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பாக தற்போது இடம்பெற்று வரும் புதிய சுற்று விசாரணைகளின் விளைவாக, ஷிரந்தி ராஜபக்க்ஷ கைது செய்யப்படும் சாத்தியம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post